தமிழக செய்திகள்

6 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, திடீர் காற்றோடு மழை பொழியக் கூடிய வானிலை உள்ளதை குறிக்கும்.

சென்னை,

6 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

முரசு புயல்

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் வரும் நவம்பர் 3-ம் தேதி அன்று நெல்லூர்-நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் 'முரசு' புயல் உருவான நிலையில், 6 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. திடீர் காற்றோடு மழை பொழியக் கூடிய வானிலை உள்ளதை குறிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT