தமிழக செய்திகள்

தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்று: சாலையை மூடிய மணல்

கம்பிப்பாடு அரிச்சல்முனை கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.

ராமேசுவரம்,

தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட் டது. மேலும் களங்கரை விளக்கம் எதிரே அரிச்சல்முனை சாலையை மணல் மூடியது. இந்த மணலை அகற்ற வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் சீற்றம்

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக 3-வது எண் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன். கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கம்பிப்பாடு அரிச்சல்முனை கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.

போக்குவரத்து இடையூறு

அரிச்சல்முனை பகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி கடல் நீரானது சாலை வரை வந்து செல்கின்றன. மேலும் பலத்த சூறாவளி காற்றும் வீசி வருவதால் தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் எதிரே உள்ள சாலையில் மணல் மூடி காட்சி அளித்து வருகிறது. இத னால் தனுஷ்கோடி செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மணலில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக தனுஷ்கோடி சாலையில் மூடியுள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT