சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக சென்னையில் கடும் வெயில் நிலவியது. இதனால் மக்கள் தவித்து வந்த நிலையில், இன்று காலையில் திடீரென வானிலை மாறியது. நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. எழும்பூர், புரைசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது.
பலத்த காற்றால் வெப்பம் தணிந்து சற்றும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இதற்கிடையே சென்னையில் பலத்த காற்று காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு சென்றது. துபாய், அபுதாபி, வாரணாசி, டெல்லி, கொல்க்கத்தாவில் இருந்து வந்த 9 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.