சென்னை,
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
முன்னாள் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்திருப்பது ஜம்முவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
மரியாதைக்குரிய டாக்டர் பரூக் அப்துல்லா மீதான படுகொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.