தமிழக செய்திகள்

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குடியாத்தத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடியாத்தத்தை அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் துர்கா (வயது 17) குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மதியம் துர்காவின் தாய் பத்மா வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது துர்கா வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செனஅறனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் துர்கா ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகயோர் வழக்குப் பதிவு செய்து துர்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு