தமிழக செய்திகள்

மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: ஆசிரியரை கண்டித்து பள்ளியில் உறவினர்கள் முற்றுகை

சென்னையில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர், தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாததால், மறுதேர்வு எழுதினார்.

சென்னை,

சென்னை அம்பத்தூர், சிவானந்தாநகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கமலேஷ் (வயது 14). அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர், தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாததால், கடந்த 9-ம் தேதி மறுதேர்வு எழுதினார்.

மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை:

பின்னர் வீட்டுக்கு வந்த கமலேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ் ஆசிரியர், கமலேசை தரக்குறைவாக பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அம்பத்தூர் போலீசார் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.