தமிழக செய்திகள்

மாணவி கொலை வழக்கு: குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம்

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த புதன்கிழமை வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதனை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, மாநில செயலாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்டுராஜா, சுயம்பு, சரவணன் சிவபெருமாள் பாஜக நிர்வாகிகள் கந்தசாமி, பெஞ்சமின் பாண்டியன், லீலாவதி, புகழ்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT