தமிழக செய்திகள்

திறனாய்வு தேர்வில் மாணவி வெற்றி

திறனாய்வு தேர்வில் செங்கோட்டை அருகே தெற்குமேடு பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.

செங்கோட்டை:

மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில் செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு அரசு நடுநிலைப்பள்ளி மாணவி சுமித்தரா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். சாதனை படைத்த மாணவியை செங்கோட்டை வட்டார கல்வி அலுவலா ஜான்பிரிட்டோ, பள்ளி தலைமை ஆசிரியா ஆல்பர்ட்செல்வின், ஆசிரியா பயிற்றுனாகள் சுப்புலட்சுமி, முத்துசரோஜினி, சுகந்தி, ஆசிரியாகள் ஜான்பிரைட், பத்மாவதி, தனலெட்சுமி, செல்வி, ராஜேஸ்வரி, மைதிலி, தமிழ்ச்செல்வி, தன்னார்வ ஆசிரியாகள் சாந்தி, அன்புமதி, பள்ளி மேலாண்மைக் குழுவினா, பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினா.