மதுரை,
பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஆய்வு மேற்கோண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய அவர்,
போதையில்லா தமிழ்நாடு என்பது எங்களின் இலக்கு. குற்றங்களில் தாய்மடியே போதைப்பொருட்கள் தான்.
போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் போதையில்லா தமிழ் நாடு உருவாகும்.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவோம். போர்களே முடியும் போது பள்ளி பிரச்சனைகளை சரி செய்ய இயலாதா?
ஏற்கனவே அரசு பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ அது தொடரும். ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எப்படி மாணவர்களை அணுக வேண்டும் என்கிற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவர்கள் சாதி கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது. நானே குங்குமம், விபூதியுடன் தான் பள்ளிக்கு சென்றேன். சாதி கயிறு விவகாரத்தில் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.