ஈரோடு,
இந்தியாவில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்களே கல்வியில் சிறந்து விளங்குகின்றன. குறிப்பாக தமிழகம் கல்வி வளர்ச்சியில் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு விதை போட்டவர் முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த காமராஜரால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
அவரை தொடர்ந்து வந்த அனைத்து முதல்-அமைச்சர்களும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். இதன்காரணமாக மற்ற மாநிலங்களில் வியந்து பார்க்கும் அளவுக்கு கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு சாட்சியாக ஈரோடு மாநகராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களை தற் போது பார்க்கலாம்.
ஈரோடு காமராஜ் வீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. தொடக்கத்தில் தமிழ் வழி கல்வி கற்பிக்கப்பிட்டது. பெற் றோரின் கோரிக்கையின் அடிப்படையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) மோகனாம் பாள், ஆசிரியர் பெனினாள், இந்தி ஆசிரியர் சத்யா என்று 3 பேர் பணியாற்றுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தாலும் இந்த தொடக்கப்பள்ளி ஏன் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு சாட்சி என்று நினைக்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது. இந்த பள்ளியில் படிக்கும் 46 பேரில் 44 மாணவ- மாணவிகள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) மோகனாம்பாள் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் மொத்தம் 46 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 3-ம் வகுப்பில் ஒரு மாணவி, 4-ம் வகுப்பில் ஒரு மாணவனையும் தவிர மற்ற அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் இங்கு படிக்கின்றனர். ஈரோட்டிலேயே எங்கள் பள்ளியில் தான் தமிழ்மொழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்தி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோரின் கோரிக்கையின்பேரில் வடமாநிலத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால் இந்தி ஒரு பாடமாக சேர்க்கப்படாமல் அவர்களுக்கு பேச, எழுத மட்டும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 1-ம் வகுப்பிலேயே தமிழ்மொழி கற்றுக்கொடுக்கப்படுவதால் வடமாநில குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். எங்கள் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை மூலம் கற்றுக்கொடுக்கப் படுகிறது. இதனால் பார்த்தும். கேட்டும் எளிதாக தமிழை எளி தாக புரிந்துகொள்கின்றனர். அவர்கள் 3-ம் வகுப்பில் இருந்து 4-ம் வகுப்பு செல்லும்போது தமிழை சரளமாக பேச, எழுத கற்றுக்கொள்கின்றனர்.
மேலும் படிப்பை முடித்து பள்ளியை விட்டு செல்லும் போது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளையும் கற்றுக் கொள்கின்றனர். அரசு பள்ளி என்பதால் காலை உணவு. மதிய உணவு, இலவச சீருடை, புத்தகங்கள், நோட்டு-புத்த கங்கள் என அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. இதனால் வடமாநில பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் தங்களது குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.