சேலம்,
வீட்டுத் தோட்டம் அமைக்க அரசு மானியம் வழங்குவதாகவும் விவசாயிகள், இல்லத்தரசிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் சேலம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தோட்டக் கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீட்டு தோட்டம் அமைக்க விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. பாரம்பரிய பழங்கள் (வாழை), காய்கறிகள், தர்பூசணி, மிளகு, புளி, மல்லிகை, தென்னை ஆகிய பயிர்களுக்கு மானியம் வழங்கப் பட உள்ளது. மேலும் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட இனத் தின் கீழ் மாடித்தோட்ட தளைகள் ஒரு எண்ணுக்கு ரூ.725 வீதம். நிழல்வலை குடில் அமைப்பு (100 ச.அ.) ஒரு எண்ணுக்கு ரூ.3,500 வீதம் 50 சதவீதம் மானியத்திலும், காய்கறி விதை தளைகள் ஒரு எண்ணுக்கு ரூ.45 வீதம், பழச்செடி தொகுப்புகள் ஒரு எண்ணுக்கு ரூ.75 வீதம் 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தளிர் கீரைகள் வளர்ப்பு இனத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் கீரை தொகுப்பு ஒரு எண்ணுக்கு ரூ.600 வீதம் பயனா ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், வாழைக்கு முட்டு கொடுத்தல் இனத்தில் ஒரு எக்டருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 50 சத வீத மானியமும், வெற்றிலையில் ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மைக்காக ஒரு எக்டருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மானியம் விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள் ளது. எனவே வீட்டுத் தோட்டம் அமைக்க இருக்கும் விவசாயிகள், பெண்கள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அனுகி பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.