தமிழக செய்திகள்

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஆகச்சிறந்த ஆசான்கள்: நயினார் நாகேந்திரன்

அனைத்து மாணவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

சென்னை,

தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்கள் கனவுகளின் அடுத்த படிக்கு முன்னேறியிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்கள் திறமைகள் மூலமும், வியத்தகு அறிவாற்றல் மூலமும் கற்றறிந்த நம் தமிழ் சமூகத்தை மென்மேலும் உயர்த்திட வேண்டுமென வெற்றி பெற்ற மாணவ சமுதாயத்தினை வேண்டி கேட்டு கொள்கிறேன்.

மேலும், ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிப்பினை என்பதை மனதில் கொண்டு, இந்த முறை தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள் மறு தேர்விற்குத் தங்களை மன உறுதியுடன் தயார்படுத்தி வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஆகச்சிறந்த ஆசான்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.