தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென ஏற்பட்ட சூறாவளி - வைரல் வீடியோ

சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்து சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையம் அருகே இன்று திடீரென சூறாவளி காற்று வீசியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சூறாவளி

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே விமான நிலையம் இன்று மாலை திடீரென சூறாவளி காற்று வீசியது.

விமான நிலையம் அருகே ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்று வாகைக்குளம் சுங்கச்சாவடியை தாக்கியது. இதில் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்து சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டன. தூத்துக்குடியில் சூறாவளி காற்று வீசியது குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.