ஈரோடு,
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.
ஈரோடு மார்க்கெட்டில் நேற்று ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.17,300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மேலும் ரூ.400 உயர்ந்து ரூ.17,777க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சராசரியாக குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனை ஆன நிலையில், ஒரே மாதத்தில் ரூ.3000 விலை அதிகரித்துள்ளது. மஞ்சள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.