தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை கவுண்டனூரை சேர்ந்தவர் நடேசன் (வயது 56). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா (47). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நடேசன் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள விவசாய தோட்டத்தில் விஷம் குடித்து தற்காலை செய்து கொண்டார். இதுகுறித்து கோகிலா கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT