தமிழக செய்திகள்

தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 53). தறித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறி தறி நெய்யும் இடமான புதுப்பாளையத்தில் ராமலிங்கம் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் தறிப்பட்டறையில் தங்கியிருந்த கிருஷ்ணன் நேற்று மதியம் ராமலிங்கம் வீட்டில் இல்லாத நேரத்தில் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணனுக்கு கீதா (49) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT