கோவை,
கோவையில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் எலுமிச்சைக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. தற்போது எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மற்ற பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பழங்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-
மாதுளை-ரூ.240, கருப்பு திராட்சை-ரூ.100, ஆரஞ்சு-ரூ.140, சாத்துக்குடி-ரூ.60, ஆப்பிள்-ரூ.280, தர்பூசணி-ரூ.30, முலாம்பழம்-ரூ.35, பப்பாளி-ரூ.32.
மேலும் காய்கறிகளின் விலை விவரம்(கிலோவில்) வருமாறு:-தக்காளி (நாடு) ரூ.20, தக்காளி (ஆப்பிள்) ரூ.22, சின்ன வெங்காயம்-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.20, மிளகாய்-ரூ.42, கத்தரிக்காய்-ரூ.44, வெண்டைக்காய்-ரூ.58, அவரை-ரூ.62, பாகற்காய்-ரூ.45. இந்த தகவலை வியாபாரிகள் தெரிவித்தனர்.