தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறையை முன்னிட்டு கோடை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மும்பை சி.எஸ்.டி. நிலையத்தில் இருந்து இன்று முதல் ஜூன் 7-ந் தேதி வரை அனைத்து நாள்களிலும் அதிகாலை 12.20 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரெயில் (எண்: 01015) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (20-ந் தேதி) முதல் ஜூன் 8-ந் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரெயில் (எண்: 01016) மறுநாள் வருகிற 21-ந் தேதி முதல் ஜூன் 9-ந் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு மும்பை சி.எஸ்.டி. நிலையம் சென்றடையும்.
இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், ரேணிகுண்டா உள்ளிட்ட 24 நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.