சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்தது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரியை கடந்து வெப்பம் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கிய நிலையில், மேலும் வெப்பம் அதிகரிக்குமோ? என பரபரப்பாக பேசப்பட்ட சூழலில், நேற்று தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருந்தது.
தொடர்ச்சியாக வாட்டி வதைத்த வெயிலுக்கு மத்தியில், தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் நேற்று தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. நேற்று ஈரோட்டில் 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), கரூர் மற்றும் வேலூரில் தலா 100.4 டிகிரி (38 செல்சியஸ்) வெப்பமும் பதிவானது. மற்ற இடங்களில் எல்லாம் இயல்பை விட 2.5 செல்சியஸ் வரை வெப்பம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சாதகமான கடல் சார்ந்த அலைவுகளின் வரு கையால், இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளைக்குள் (வியாழக்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 4 நாட் களுக்கு கோடை மழை தீவிரமடைய உள்ளதாகவும்,
சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என மாநிலம் முழுவதும் நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.