சென்னை,
கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி - பெங்களூரு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06007) வருகிற மே மாதம் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) திருச்சியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மதியம் 1.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06008) வருகிற மே மாதம் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில் ) பெங்களூருவில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்து சேரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.