சென்னை,
கோடை காலம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, நெல்லை - சென்னை இடையே அதிவேக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து ஏப்ரல் 16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069) அன்று இரவு 1 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.
இதேபோல், நெல்லை - தாம்பரம் இடையேயும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஏப்ரல் 12, 19, 26 ஆகிய தேதிகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06166) மறுநாள் காலை 11.35 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.55 மணிக்கு (திங்கட்கிழமை) புறப்படும் சிறப்பு ரெயில் (06165) அன்று நள்ளிரவு 2 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.