தூத்துக்குடி,
கோடைக்காலப் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே 2 வாரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
ரெயில் இயக்கப்படும் நாட்கள்:
தூத்துக்குடி-தாம்பரம் (வண்டி எண்: 06018): ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27 (திங்கட்கிழமைகளில்) தூத்துக்குடியிலிருந்து புறப்படும்.
தாம்பரம்-தூத்துக்குடி (வண்டி எண்: 06017): ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 28 (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்திலிருந்து புறப்படும்.
வண்டி எண் 06018: தூத்துக்குடியில் இருந்து திங்கள் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும்.
வண்டி எண் 06017: தாம்பரத்தில் இருந்து செவ்வாய் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (புதன்) அதிகாலை 4.30 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும்.
முக்கிய நிறுத்தங்கள்: இந்த சிறப்பு ரெயில்கள் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரெயில்களில் 17 எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை மற்றும் திருமண விசேஷங்கள் காரணமாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்தச் சிறப்பு ரெயில்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களை இயக்கிய தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.