தமிழக செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

45 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டு தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

பள்​ளிக் கல்​வித் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் செயல்​படும் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​கள் மற்​றும் தனி​யார் சுயநிதி பள்​ளி​களில்1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெற்று இறுதித் தேர்​வு​கள் இன்று மாலையுடன் முடிவடைகின்​றன.

இந்நிலையில் இன்றுடன் முழு ஆண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. 45 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.