தமிழக செய்திகள்

கோடை விடுமுறை: நீர்நிலைகளுக்கு செல்லாமல் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கல்வித்துறை அறிவுரை

மாணவர்கள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த 16-ந்தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெற்று 45 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். விளையாடும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

நீச்சல் தெரியாமல் கடல், குளம், கிணறு, ஆறுகளுக்கு சென்று குளிப்பதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே மாணவர்களை நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. மாணவர்கள் இசை, நட னம், ஓவியம் போன்றவற்றை கற்று தனித்திறமையை மேம்ப டுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.