சென்னை,
காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.
வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீன் பிரியர்கள், தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர்.