தமிழக செய்திகள்

சண்டே ஸ்பெஷல்: சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் வெஜ் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி - 1 கப்

கடலை எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

கேரட் - 2

குடை மிளகாய் - 1

முட்டைகோஸ் - 300 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

மிளகுப்பொடி - 1 டீஸ்பூன்

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மல்லி மற்றும் புதினா இலை - சிறிதளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதை கொதிக்கும் நீரில் போடவும். அரிசியை போடுவதற்கு முன்பாக, கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். இவ்வாறு எண்ணெய் ஊற்றுவதால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. அரிசியை போட்டவுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும். அரிசி குழைந்துவிடக்கூடாது. 90 சதவீதம் அளவுக்கு வேகவிடவும். பின்னர், தண்ணீரை நன்கு வடித்து சாதத்தை உலரவிடவும்.

மற்றொரு பக்கம், வாய் அகன்ற பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடானவுடன் சிறிது சிறிதாக வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து, சிறியதாக வெட்டிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்ப்பதுடன், சில்லி சாஸ், சோயாசாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். அதன்பிறகு, உலரவைத்த சாதத்தை சேர்க்கவும். சாதத்தை கிளறிவிட்டு மிளகுப்பொடியை சேர்த்து கிளறிவிடவும். மல்லி, புதினா இலையை சேர்த்து இறக்கவும். சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் ரெடி.