தமிழக செய்திகள்

மு,க.ஸ்டாலின் சொன்னால் விஜய்க்கு ஆதரவு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஸ்டாலின் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்போம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன் கூறினார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆதரவு கேட்டு தவெக நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினரை சந்தித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சந்தித்து ஆதரவு கோரினார். அதேபோல, விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீனை தவெக நிர்வாகி அருண் ராஜ் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால்,தவெகவிற்கு ஆதரவு கொடுக்க முடியாது என்று இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் மறுத்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருப்பதால் ஆதரவு அளிக்க இயலாது. ஸ்டாலின் சொல்வதை அப்படியே கேட்போம். திமுக கூட்டணியில் நேற்று இருந்தோம், இன்று இருக்கிறோம். நாளையும் இருப்போம்”என்றார்.