தமிழக செய்திகள்

திருச்சுழியில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கனிமொழியின் அதிரடி பிரசாரம்

புதிய மின் மோட்டார்களை 20 லட்சம் விவசாயிகளுக்கு மேல் பயன்பட கூடிய வகையிலே அந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

விருதுநகர்,

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கனிமொழி இன்று விருதுநகர் மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி கூறியதாவது:

நம் பிள்ளைகள் பள்ளிகூடத்தில் போய் படிக்க கூடிய பிள்ளைகள் காலையில் பசியோடு இருக்க கூடாது என்பதற்க்காக தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டம் காலை உணவு திட்டம். இதுவரை முதலாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் பிள்ளைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்த உடனே அந்த திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டித்து தரப்படும். நம்முடைய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் நம்முடைய கலைஞர்.

இன்று நம்முடைய முதல் அமைச்சர் அண்ணன் ஸ்டாலின் விவசாயிகளுக்காக எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத புதிய மின் மோட்டார்களை 20 லட்சம் விவசாயிகளுக்கு மேல் பயன்பட கூடிய வகையிலே அந்த திட்டத்தை அறிவித்துள்ளார். நம்முடைய முதல் அமைச்சர் சொன்னால் செய்வார்.

கலைஞர் எப்படி வண்ண தொலைகாட்சி பெட்டி தரேன் என்று சொல்லி தந்தாரோ அந்த தொலைகாட்சி பெட்டி இன்று வரை வேலை செய்கிறதா தலைவர் கலைஞர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களின் மனதில் இருப்பது போல அந்த தொலைகாட்சி பெட்டிகள் இத்தனை ஆண்டுகள் பிறகும் இன்று வரை வீடுகளிலே பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

அது திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலே இன்று நம்முடையா முதல் அமைச்சர் மின் மோட்டாரை தருகின்றேன் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள். இப்படி யார் யார்க்கு என்ன வேண்டும், வீடு தேடி உங்களுக்கு கல்வி, மருத்துவ சிசிச்சை மருத்துவங்கள் வந்தது.

அது மட்டும் இல்லாமல் நம்முடைய ஊர்களுக்கு பக்கத்திலேயே முகாம்கள் அமைத்து அந்த முகாம்களில் எந்த துறைகளில் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்க கூடிய மருத்துவங்கள் எல்லாம் நம் பகுதிகளில் கிடைக்க வழி செய்த திட்டம் தான் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை தந்த இயக்கம், ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.