திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே தலைமையில் காவல் துறையினரின் இரவு நேர சிறப்பு ரோந்து பணி மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்றன.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென இரவு நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.