தமிழக செய்திகள்

நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை நடைபெற்றது.

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமமும், தொடர்ந்து சிறப்பு அபிசேகம், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT