சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை கமலாலயத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினோம்.
இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அகில இந்திய ஒற்றுமைக்காக தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பாடுபட்ட ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தியாகங்களையும், “ஒரே நாடு – ஒரே அரசியலமைப்பு” என்ற அவரது உயர்ந்த தேசியக் கொள்கையையும் இந்நாளில் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்ந்தோம்.
தேசத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த தனது வாழ்நாளையே அர்ப்பணித்த அந்த மாமனிதருக்கு எங்கள் ஆழ்ந்த மரியாதையையும் புகழஞ்சலியையும் செலுத்துகிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.