தமிழக செய்திகள்

லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது தலைமை அல்ல.. ஏமாத்துவேலை! - வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அரசியல் ரீதியான கருத்துகள் பகிரப்படுகின்றன.

சென்னை,

‘லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது தலைமை அல்ல ஏமாத்துவேலை’ என்று போட்டியாளர் ஒருவருக்கு விஜய் சேதுபதி அறிவுறுத்தினார்.

பிக்பாஸ்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 10-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மொத்தம் 29 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிளாக் பாண்டி தலைவராக செயல்பட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து சாத்திகா, பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்திகாவிடம் தலைமை குறித்து விஜய் சேதுபதி கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“லீடர் மற்றும் லீடர்ஷிப் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப்போட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதற்கு பெயர் ஏமாற்றுவேலை” என்று தெரிவித்தார்.

தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கின்றனர். விஜய் சேதுபதி மறைமுகமாக முதலமைச்சரை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை உருவாகி உள்ளது.

SCROLL FOR NEXT