சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள மயிலம்-திண்டிவனம் இடையே வருகிற 24,26,28 ஆகிய தேதிகளில் மதியம் 12.15 முதல் மாலை 4.15 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்விவரம் வருமாறு:-
* தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட வருகிற 24,26,28 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (66045), திண்டிவனம்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* விழுப்புரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046), விழுப்பு ரம்-திண்டிவனம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.