தமிழக செய்திகள்

தமிழ்க்கனவு நிகழ்ச்சி

தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி வீரபாண்டியில் நேற்று நடந்தது.

தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். எழுத்தாளரும், கவிஞருமான மனுஸ்யபுத்திரன் கலந்துகொண்டு கல்வியால் கடந்த காரிருள் என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் சிறப்பான கேள்விகள் கேட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT