சென்னை,
தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.