தமிழக செய்திகள்

ஆயிரம் விளக்கு தொகுதி: வேட்பாளர்களுடன் தேர்தல் செலவினம், தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்களுடனான தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில், எண்.20 ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் தலைமையில் வேட்பாளர்களுடனான தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, எண்.20 ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வீரேந்திர குமார், தேர்தல் செலவினப் பார்வையாளர் பவன் லால் மீனா, தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஐ.வளர்மதி முன்னிலையில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுடன் தேர்தல் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 11.04.2026 அன்று நுங்கம்பாக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் தேர்தல் செலவினம் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.