தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவு

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியில் 11 மணி நிலவரப்படி 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் 18,451 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் 11,667 வாக்குகள் பெற்று பின்னடைவு ஏற்பட்டு 2வது இடத்தில் உள்ளார். அதை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சி.த. செல்லப்பாண்டியன் 5,580 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் 2,488 வாக்குகள் பெற்று 4வது இடத்திலும் உள்ளனர்.