தமிழக செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மனைவி குஷ்புவுடன் சென்று வாக்களித்த சுந்தர்.சி

இந்த தம்பதியினர், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து தேர்தல் சூழலை உற்சாகமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மந்தவெளிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு மற்றும் அவர்களின் மகளுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

பொதுமக்களுடன் இணைந்து அமைதியாக காத்திருந்து வாக்களித்த இந்த தம்பதியினர், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.