தமிழக செய்திகள்

'இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது' - பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு

பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

தினத்தந்தி

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் ஸ்டாலின் குமார் : துறையூர் தொகுதியில் அம்மாபட்டி, காளிபட்டி பெத்துபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விடியல் பயண திட்டதின் கீழ் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய, பேரவைத் தலைவர் அப்பாவு, பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நேரில் ஆய்வு செய்து, அனைத்து பட்டிகளுக்கும் விடியல் பயணத் திட்டத்தின் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்