தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது; புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

சென்னை,

தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். அவருக்கு தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே, தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையாவுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சட்டசபை கூடிய உடன் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து நாளை மறுதினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.