சென்னை,
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. அதில் முக் கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, அரசின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது, அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பான முடிவுகள், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் ஆகியவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில் 'வெற்றி தமிழகம்' என்ற தொலை நோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
'வெற்றி தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் மொத்தம் 436 திட்டங்கள் மற்றும் இலக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டங்கள் தொடர்பாகக் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
அரசின் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு துறைகளின் பங்களிப்பு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் தொடர்பான அம்சங்களும் பரிசீலிக்கப்பட உள்ளன. குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைப்பது குறித்தும், மீனவர்கள் எதிர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர், விதி 110-ன் கீழ் பல் வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அரசின் அறிவிப்புகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.