தமிழக செய்திகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்! - வைகோ வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு அலைபேசி மூலம் வைகோ பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

சென்னை,

மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு இன்று காலை 8.40 மணி அளவில் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

பிறந்த நாள் வாழ்த்து

அவர் கூறிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-

“ முதல்-அமைச்சரே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ் நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் நல்லாட்சி நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் அதற்கு நன்றி கூறினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.