தமிழக செய்திகள்

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மேற்குரதவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு நாள்  கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதியார், காமராஜர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு குறித்து பேச்சு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயந்திபிளாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT