தமிழ்நாடு அரசு 
தமிழக செய்திகள்

தமிழ்நாடு நாள் சிறப்புப் போட்டிகள்: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்

போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு tamilnaduday2026@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.

சென்னை,

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ஆறு போட்டிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்கவும். பள்ளிக்கல்வி. தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும். தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தமிழறிஞர்களின் அர்ப்பணிப்பையும். தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் மாணாக்கர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் "தமிழ்நாடு நாள் - சிறப்பு போட்டிகள்" என்ற தலைப்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளின் நோக்கம்

தமிழ்நாட்டின் வரலாறு. தொன்மை, தனித்துவமான கலை, பண்பாடு. பாரம்பரியம், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழ்நாட்டின் அடையாளங்களையும். பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்கும். பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.

போட்டிகளின் விவரங்கள்:

1. பேச்சுப் போட்டி -1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள், தமிழ் மொழியின் முக்கியத்துவம், மரபுகள், ஆளுமைகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள் குறித்த தலைப்புகளில் மாணவர்கள் தங்களது பேச்சுகளைக் காணொலியாகப் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம்.

* காணொலியின் கால அளவு குறைந்தபட்சம் 1 நிமிடம் முதல் அதிகபட்சம் 3.00 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

* கோப்பின் அளவு அதிகபட்சம் 100 MB ஆக இருக்க வேண்டும்.

2. ரீல்ஸ் போட்டி (Reels)

தமிழ்நாட்டின் சிறப்பம்சங்கள். தமிழர் பண்பாடு. பாரம்பரியக் கலைகள், தமிழ்மொழியின் தனித்துவம், பாரம்பரிய உணவு வகைகள், கைவினைக் கலைகள் மற்றும் சிறப்புப் காணொலிகளை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம். பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் ரீல்ஸ்

காணொலியின் கால அளவு குறைந்தபட்சம் 30 விநாடிகள் முதல் அதிகபட்சம் 60 விநாடிகள் வரை இருக்க வேண்டும்.

* கோப்பின் அளவு அதிகபட்சம் 70 MB ஆக இருக்க வேண்டும்.

3. மீம்கள் உருவாக்கும் போட்டி (MEMES)

தமிழ்மொழியின் முக்கியத்துவம், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தமிழ்நாட்டின் அடையாளம், வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரசியமான மீம்களை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம்.

4. புகைப்படப் போட்டி (Photography)

பிரிவு -நிழற்படம்

தமிழ்நாட்டின் அழகு. பாரம்பரியம், கட்டடக்கலை, இயற்கைக் காட்சிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தனித்துவத்தைப் பறைசாற்றும் வகையில் புகைப்படங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம்.

5. ஆவணப்படப் போட்டி (Documentary - 5 முதல் 7 நிமிடங்கள் வரை)

தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட வளர்ச்சிகள், தமிழர்களின் வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள். மருத்துவ முறைகள். கலை. கட்டடக்கலை. பாரம்பரிய மரபுகள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆவணப்படங்களை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம்.

* ஆவணப்படத்தின் கால அளவு குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 7 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

* கோப்பின் அளவு அதிகபட்சம் 100 MB ஆக இருக்க வேண்டும்.

6. சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி (Poster Designing) - கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்

தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருள்கள், அவற்றின் தனித்துவம். பாரம்பரிய கைவினைக் கலைகள், தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான சுவரொட்டிகளை வடிவமைத்துச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு tamilnaduday2026@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்க்கண்ட விரைவு துலங்கல் குறியீடு (QR code) வாயிலாக தங்களது படைப்புகளை 06-12-2026-க்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குறியீடு

படைப்பாற்றல், தமிழ்ப்பற்று

தமிழ்நாட்டின் வரலாறு, மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய பெருமைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் இந்த முன்னெடுப்பில் பள்ளி, கல்லூரி மாணாக்கர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று தங்களது படைப்பாற்றலையும் தமிழ்ப்பற்றையும் வெளிப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT