தமிழக செய்திகள்

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் கள உதவியாளர் பதவி; தேர்வர்களின் பட்டியல் இன்று இணையத்தில் வெளியீடு

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கள உதவியாளர் பதவிக்கான 1,794 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு முடிவுகள் 9.4.2026 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பானோத்ம்ருகேந்தர்லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள கள உதவியாளர் பதவிக்கான 1,794 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு தொழிற்பயிற்சி நிலை II-க்கான அறிவிக்கை எண்:13/2025, நாள். 3.9.2025-க்கான தேர்வு முடிவுகள் தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 9.4.2026 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மேற்குறிப்பிட்ட பதவிக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண் இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 14.5.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.