தமிழக செய்திகள்

3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் டெண்டர் வெளியீடு

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் பல்வேறு கட்டங்களாக மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் வரும் 2027-ம் ஆண்டில கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உச்சபட்ச மின் தேவையை சமாளிப்பதற்காக 2,000 முதல் 3,500 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

மின்சாரம் கொள்முதல்

அந்த வகையில 2027 ஜனவரி 18-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கறி அடிப்படையிலான அனல்மின் நிலையங்களில் இருந்து மட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறுகிய கால ஒப்பந்தம்

மாதவாரியாக கொள்முதல் செய்யப்படக்கூடிய மின்சாரத்தின் அளவை பொறுத்தவரை ஜனவரி 18 முதல் 31-ந்தேதி வரை 2,000 மெகாவாட், பிப்ரவரி மாதத்துல 3,000 மெகாவாட், மார்ச் மாதத்தில் 3,500 மெகாவாட், ஏப்ரல் மாதத்தில் 3,500 மெகாவாட், மே மாதத்தில் 2,500 மெகாவாட் மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 2,500 மெகாவாட் என குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெண்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நிபந்தனைகள்

இந்த டெண்டருக்கு பல்வேறு நிபந்தனைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும் குறைந்தபட்சம் 20 மெகவாட் மின்சாரத்தை வழங்க வேண்டும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையான மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தகுதி பெற்ற மின் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்கலாம்.

அதேபோல் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மின்சாரத்தை மீண்டும் இந்த டெண்டரில் வழங்க முடியாது. ஒரு மெகாவாட்டிற்கு மாதத்திற்கு 30,000 ரூபாய் வீதம் முன்வைப்பு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் இ.எம்.டி. என்ற அடிப்படையில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மின் சேவையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் பல்வேறு கட்டங்களாக மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின்பகர்மான கழகம் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT