தமிழக செய்திகள்

தமிழக விவசாயிகள் பாஜகவின் போலி அரசியலை புரிந்துகொண்டுள்ளனர் - மாணிக்கம் தாகூர்

போராடும் கர்நாடக பாஜகவை எதிர்க்க நயினார் நாகேந்திரனுக்கு தைரியம் இருக்கிறதா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

​தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் மோடியிடமோ , மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வு எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கர்நாடகாவில் போராடும் பாஜக

கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே?

​ஒருவேளை பார்க்க மறந்துவிட்டீர்கள் என்றால், இதோ இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ட்விட்டர் பக்கங்களைச் (Twitter handles) சற்று பாருங்கள்!

எதிர்க்க தைரியம் இருக்கிறதா?

​காவிரி உரிமையில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடும் எடியூரப்பாவையும் கர்நாடக பாஜகவையும் எதிர்க்க உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?

​தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் மோடியிடமோ , மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?

பாஜகவின் இரட்டை வேடம்!

​கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது, டெல்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது பழியைப் போடுவது - இதுதான் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேடம்!

​உங்கள் இந்தப் பொய் நாடகத்தையும் போலி அரசியலையும் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.