சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026 - 27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 (Shift-I - 101022 / Shift-II - 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் இதர பிரிவினர் மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48/-, பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும். இணையதளம் வழியாக விண்ணப்பம் பதிவுசெய்ய 2026-27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு 07.05.2026 தொடங்கி 29.05.2026 வரை நடைபெறுகிறது.
கட்டணம் செலுத்தும் முறை:-
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை கீழ்க்கண்ட மின்னணு முறைகள் மூலம் இணையதளம் வாயிலாகவே செலுத்தலாம்:
டெபிட் கார்டு (Debit Card)
கிரெடிட் கார்டு (Credit Card)
நெட் பேங்கிங் (Net Banking)
UPI (GPay, PhonePay)
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக்கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044 -24343100 / 24342011 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.