தமிழக செய்திகள்

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்தால் சிறை தண்டனை- தமிழக அரசு பரிசீலனை

பொது இடங்களில் தடையை மீறி புகைப்பிடித்தால் தற்போது அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

சட்டம்

பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரி, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதால், அவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க ஏற்கனவே சட்டம் இருக் கிறது. தடையை மீறி புகைப்பிடித்தால் தற்போது அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை முழுமையாக கட்டுப்ப டுத்த முடியாத நிலை தொடர்கிறது. இதனால் அபராதம் மட்டும் போதாது, தண்டனையை கடுமையாக்கினால்தான் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது.

கடுமையான நடவடிக்கை

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது ஏற்கனவே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2025-26-ம் நிதி யாண்டில் மட்டும் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக 47 ஆயிரத்து 941 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.69 லட்சத்து 57 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு உள்ளது.