தமிழக செய்திகள்

மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உள்ளிட்ட 2 பேர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993, பிரிவு 22(1)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழ்நாடு கவர்னர், சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஆர்.என்.மஞ்சுளா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

இப்பணியில் அவர்கள் பொறுப்பேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அவர்களுக்கு எழுபது வயது பூர்த்தியாகும் நாள் - இதில் எது முந்தையதோ அதுவரை - இப்பதவியை அவர்கள் வகிப்பார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.